கச்சா எண்ணெய் பீப்பாய் 180 டாலராக உயரும்.. இஸ்ரேலுக்கு சௌதி கடும் எச்சரிக்கை!

Iran Israel War: ஈரான் நாட்டில் உள்ள சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 180 டாலராக உயரும் என இஸ்ரேலுக்கு சௌதி அரேபியா எச்சரித்துள்ளது.

Published on: March 20, 2026 at 11:09 am

ரியான், மார்ச் 20, 2026: கச்சா எண்ணெய் விலை பீப்பாய் $180-ஐ தாண்டலாம் என இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சௌதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் சௌத் பார்ஸ் எண்ணெய் வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் போன்ற தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.

எண்ணெய் சந்தை

தற்போது பிரெண்ட் குரூட் கச்சா எண்ணெய் விலை $115-ஐ கடந்துள்ளது; இந்த நிலையில் சௌதி அரேபியா நாட்டில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. மேலும், அந்த எச்சரிக்கையில் கச்சா எண்ணெய் விலை $180-ஐ தாண்டும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

இதற்கிடையில், ஈரான் தொடர்ந்து தாக்கினால், அதன் எரிவாயு புலங்கள் “முழுமையாக அழிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய நாடுகளுக்கு பாதிப்பு

இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காரணமாக ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன.

இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் போருக்கு எதிர்ப்பு.. ஜோ கென்ட் ராஜினாமா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com