Gold Rate Today: சென்னை தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.
Gold Rate Today: சென்னை தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

Published on: March 20, 2026 at 10:27 am
சென்னை, மார்ச் 20 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.5,360 குறைந்தது.
நேற்று காலை சவரனுக்கு ரூ. 2 ஆயிரத்து 160 குறைந்த நிலையில் மாலை மேலும் ரூ. 3200 குறைந்தது. இதனால் தங்கம் விலை நேற்று கிராம் ரூ. 13 ஆயிரத்து 900-க்கும் சவரன் ரூபாய் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்துள்ளது இதனால் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
22 கேரட் ஆபரணத் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் ரூ. 13 ஆயிரத்து 950 க்கும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூபாய் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 15 ஆயிரத்து 218க்கும், சவரன் ரூபாய் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 744க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் இன்றும் கிராமுக்கு ரூ. 5 சரிவடைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 265க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 260 க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க அனில் அம்பானியை சுற்றுப் போட்ட சி.பி.ஐ.. 2 வங்கிகளில் இத்தனை கோடி கடனா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com