பழைய பிரச்சினை தீர போகிறது.. 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 20, 2026) பலன்கள்!

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (மார்ச் 20, 2026) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Published on: March 20, 2026 at 12:02 am

Updated on: March 19, 2026 at 8:27 pm

இன்றைய ராசிபலன்கள் (20-03-2026): எந்த ராசிக்கு காதல் கைகூடும். 12 ராசிகளின் (20-03-2026) பலன்கள் என்ன? இதில் வேலை, ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை தொடர்பான பல்வேறு கணிப்புகள் உள்ளன.

மேஷ ராசி

மேஷ ராசி அன்பர்களே இன்றைய தினம் கூடுதல் கவனம் தேவை; புதிய வாய்ப்புகள் கைவிடும். அலுவலகத்தில் சத்தமிடாதீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. தாய் தந்தை உடன் பிறந்தோரை கவனித்துக் கொள்ளுங்கள்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களே, இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்; உங்கள் ராசிக்குரிய அம்சங்களை நீங்கள் இன்று எதிர்பார்க்கலாம். பண வரவுகள் இருக்கும். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயம் ஒன்று நடைபெறுவதற்கான சலுகைகளை பார்க்கலாம்.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு காதல் கைகூடும். பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்; யாருக்கும் வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இறை வழிபாடு உகந்தது.

கடக ராசி

கடக ராசி அன்பர்களே, இன்றைய தினம் உங்களுக்கு பண வரவுக்கு பஞ்சம் இல்லை; மாலை வேலைகளில் சிவ வழிபாடு உகந்தது. அருகில் உள்ள சிவாலயங்களுக்கு செல்லுங்கள்; மனம் அமைதி பெற்று புதிய வழிகள் பிறக்கும்; சுற்றுலா செல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சனை ஒன்று இன்று முடிவுக்கு வரும்; நிலம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். யாரையும் அவமதிக்க வேண்டாம். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல், இன்று நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு உதவிகள் தேடி வரும்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களே, இன்றைய தினம் நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்; தடைகள் நீங்க விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அலுவலகத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். பயணங்களில் கவனம் தேவை. உணவு விஷயத்தில், ஆரோக்கியமான உணவு பதார்த்தங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.

இதையும் படிங்க; ரூ.1 லட்சம் முதலீடு, ரூ.2.52 லட்சம் ரிட்டன்.. பெஸ்ட் லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட்!

துலாம் ராசி

துலாம் ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களுக்கு வரவு அதிகரித்து காணப்படும்; வியாபாரங்களில் ஈடுபடும் நண்பர்களுக்கு லாப வரவுகள் உண்டு; எனினும் பணத்தை சரியாக கையாளுங்கள். நண்பர்கள் இன்றைய தினம் உங்களுக்கு உதவி புரிவார்கள். அரசியல்வாதிகளுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று நீங்கள் புதிதாக ஏதாவது ஒன்றை தொடங்குங்கள்; தொழில் என்றாலும் சரி முதலீடு என்றாலும் சரி உங்களுக்கு கை கொடுக்கும்; பண வரவுகள் உண்டு, உடல் நல விவகாரங்களில், கூடுதல் கவனம். அருகில் இருக்கும் நபர்களை நண்பர்கள் என எண்ணி அதிகம் பேச வேண்டாம்; சில நேரங்களில் இது ஆபத்தாகலாம்.

தனுசு ராசி

தனுசு ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்களுக்கு பழைய பிரச்சனை ஒன்று தீரப் போகிறது; காதல் கைகூடும், மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட முடிவுக்கு வரும் நேரம் இது; பண விஷயத்தில் கவனம் தேவை.

மகர ராசி

மகர ராசி நேயர்களே, காதல் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்குள் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்; கணவன் என்றால் மனைவியிடமோ மனைவி என்றால் கணவனிடமோ அனுசரித்து செல்வது நல்லது; என் பக்கம் நியாயம் என அதிகம் பேச வேண்டாம். நீதி பரிபாலன வெற்றியுடன், பிரச்சனைகள் தீரும் காலம் இது.

கும்ப ராசி

கும்ப ராசி நேயர்களே, இன்று நிதானம் தேவை; பண வரவுகள் எதிர்பார்த்தபடி சுமூகமாக இருக்கும்; முகத்தில் சுடர் போன்ற பிரகாசம் இன்று எதிராளியை கூட கவரும்; போட்டித் தேர்வுக்கு தயாராகும் நேயர்களுக்கு இது நல்லதொரு காலம். திருமணமான அன்பர்கள் பரஸ்பர அன்பை பொழிவார்கள். யாரேனும் உதவி கேட்டால் தயங்காமல் செய்யுங்கள்.

மீனம் ராசி

மீன ராசி நேயர்களே, உங்களின் ஈகை குணம் இன்று கூடுதல் கவனம் ஈர்க்கும்; பண வரவு உண்டு. ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள்; முதலீடுகள் பற்றி சிந்தியுங்கள், புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம்; அதே நேரம், புதிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்!

இதையும் படிங்க; எந்த மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட்? எஸ்பிஐ டாப் ஃபண்ட்கள் என்ன?

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?
Dharasuram Sri Airavatesvara Temple

சிற்பத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன்; உலகமே வியக்கும் இடம்.. தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com