Haryana | நாட்டிலேயே பணக்கார பெண்மணியான சாவித்திரி ஜிண்டால் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Haryana | நாட்டிலேயே பணக்கார பெண்மணியான சாவித்திரி ஜிண்டால் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
Published on: September 13, 2024 at 5:08 pm
Updated on: October 8, 2024 at 7:59 pm
Haryana | இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஓம் பிரகாஷ் ஜிண்டாலின் மனைவி சாவித்திரி. இவர் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
வேப்பமனுதாக்கலில் கடைசி நாளான வியாழக்கிழமை சாவித்திரி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தற்போது இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஆக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். ஹரியானா மாநிலத்தை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாரதிய ஜனதாவிடம் இருந்து இம்முறை எப்படி ஏனும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்தக் கூட்டணி அமையாமல் போனது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இங்கு எப்படி ஏனும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் களம் காண்கிறது. இந்த நிலையில், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் சாவித்திரி களம் காண்கிறார். சாவித்திரி காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ ஆக இருந்துள்ளார்.
அந்த வகையில் சாவித்திரியின் போட்டி, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேசிய சாவித்திரி, ” நான் இந்த மண்ணின் மகள். எனது மக்களின் வளர்ச்சியை விரும்புகிறேன். இந்த மக்களுக்கு நல திட்ட உதவிகள் செய்ய ஆசைப்படுகிறேன். இந்தத் தொகுதியின் வளர்ச்சியை எனது வளர்ச்சியாக பார்க்கிறேன்” என்றார்.
சாவித்திரி அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது பாஜக வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘பெயில் விதி, சிறை விதிவிலக்கு’; அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: உச்ச நீதிமன்றம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com