CPI Mutharasan: தி.மு.க. என்பது பா.ஜ.க அல்ல எனக் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், நாங்களும் அ.தி.மு.க. அல்ல எனக் கூறியுள்ளார்.
CPI Mutharasan: தி.மு.க. என்பது பா.ஜ.க அல்ல எனக் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், நாங்களும் அ.தி.மு.க. அல்ல எனக் கூறியுள்ளார்.

Published on: March 19, 2026 at 6:18 pm
சென்னை, மார்ச் 19, 2026: தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு வழங்கப்பட்ட தொகுதியில் 1 குறைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க.வை வீழ்த்த தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. முத்தரசன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, பல்வேறு விவரங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய முத்தரசன், “கொள்கை அடிப்படையில் நாங்கள் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். எங்களை நிர்பந்தப்படுத்த தி.மு.க. ஒன்றும் பா.ஜ.க. அல்ல; அதேநேரம் அடிபணிவதற்கு நாங்கள் ஒன்றும் அ.தி.மு.க. இல்லை” என்றார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: எங்கள் வேதனையை தோழமைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.. காங்கிரஸ் செல்வப் பெருந்தகை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com