கச்சா எண்ணெய் விலை கிடுகிடு அதிகரிப்பு.. ஆட்டம் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்!

Share Market Today: இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன.

Published on: March 19, 2026 at 3:10 pm

மும்பை, மார்ச் 19, 2026: இந்திய பங்குகள் இன்றைய (மார்ச் 19, 2026) மதிய நேர கடுமையான விற்பனை அழுத்தத்தில் இருந்தன. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டெண் 23,230 அருகே காணப்பட்டது.
இது, சுமார் 2.3% வீழ்ச்சி ஆகும். அதேநேரம், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு 74,970 அருகே சுமார் 2.2% வீழ்ச்சியுடன் காணப்பட்டது.

மேலும், உலகளாவிய எதிர்மறை சிக்னல்கள் மற்றும் உயர்ந்த எரிசக்தி விலைகள் இந்திய சந்தையை கடுமையாக பாதித்தன. இந்திய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் ஒருபுறம், வீழ்ச்சி பரவலாக இருந்தாலும், சில துறைகள் வலுவான வாங்குதலைக் கண்டன. சில பங்குகள் தனிப்பட்ட காரணங்களால் கடுமையாக சரிந்தன.

இதற்கிடையில், ஹெச்.டி.எஃப்.சி பங்குகள் வீழ்ந்து காணப்பட்டது. வங்கியின் பகுதிநேர தலைவர் அட்டானு சக்கரபோர்த்தி ராஜினாமா காரணமாக பங்குகள் கடுமையாக சரிந்தன.

சரிவு ஏன்?

உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்வும், மேற்கு ஆசியாவில் பதற்றமும் இந்திய பங்குச் சந்தையில் எரிசக்தி தொடர்பான பங்குகளை செயலில் வைத்தன. இதற்கிடையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் $113 பீப்பாய் அருகே சென்றதால், எரிசக்தி பங்குகள் கவனம் அதிகளவில் ஈர்க்கப்பட்டன.

உயர்ந்த பங்குகள்

அதானி டோட்டல் கேஸ் 8.86 சதவீதம் உயர்வு
ஓ.என்.ஜி.சி 2.15 சதவீதம் உயர்வு
மகாநகர் கியாஸ் 0.86 சதவீதம் உயர்வு
குஜராத் கியாஸ் 0.63 சதவீதம் உயர்வு

இதற்கிடையில் குஜராத் மாநில பெட்ரோநெட் பங்குகள் 0.45 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், முன்னணி நிறுவனத்தின் காப்பீடு பங்குகளும் வீழ்ச்சி கண்டன.

இதையும் படிங்க: ஜி.எஸ்.பி கிராப் சயின்ஸ் IPO.. ரூ.400 கோடி திரட்ட இலக்கு.. ஒரு பங்கின் விலை ரூ.10!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com