Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்.
Chennai Acid Attack : சென்னையில் திராவகம் வீச்சுக்குள்ளான பெண் பகுதி பார்வையை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்.

Published on: March 18, 2026 at 6:47 pm
சென்னை, மார்ச் 18, 2026: சென்னையில் பிரிந்து தனது தாய்- தந்தையருடன் வாழ்ந்து வந்த மனைவி மீது திராவகம் வீசிய முகம்மது அலி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் வலது கண்ணில் 50% பார்வையை இழந்துள்ளார். இடது கண்ணை திறக்க முடியாத நிலையில் உள்ளார் என்று மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையில், பலமுறை குடும்ப வன்முறைக்காக புகார் அளிக்க முயன்றபோதும், போலீசார் புகாரை பதிவு செய்யாமல் “சமரசம் செய்யுங்கள்” என்று வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி முகமது அலி (31) குன்றத்தூரைச் சேர்ந்தவர் ஆவார். தேநீர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், 6 ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாக பணிபுரியும் பெண்ணை காதலித்து, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயது மகள் உள்ளார். இந்நிலையில், மதுவுக்கு அடிமையான அலி, அடிக்கடி வேலை இழந்து, மனைவியின் நம்பகத்தன்மையை சந்தேகித்து சண்டை போட்டதால், பெண் தனது பெற்றோரின் வீட்டில் மகளுடன் பிரிந்து வாழத் தொடங்கினார்.
இதையடுத்து, முகம்மது அலி மனைவி விவாகரத்து கோரியிருந்தார், ஆனால் அலி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், மார்ச் 16, ஞாயிறு இரவு 10.30 மணியளவில், பெண்ணின் பெற்றோர் மற்றும் குழந்தை மதுரைக்கு குடும்ப விழாவிற்குச் சென்றிருந்தபோது, அலி குன்றத்தூரில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, விவாகரத்து வழங்க மறுத்து, உறவைத் தொடர வற்புறுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், பெண் மீது திராகவம் வீசியுள்ளார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் கண் பார்வை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காரில் தீ வைத்து தற்கொலை: தாயை கட்டிஅணைத்தபடி இருந்த குழந்தைகள்: நெல்லையில் இதயத்தை உருக்கும் சம்பவம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com