பான் கார்டு விதிகளில் மாற்றம்: புதிய வழிகாட்டுதல்களை தெரிஞ்சுக்கோங்க!

New PAN Card Rules: வங்கிப் பரிவர்த்தனை முதல் சொத்து வாங்குதல் வரை பான் கார்டு பயன்பாட்டில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Published on: March 17, 2026 at 3:48 pm

புதுடெல்லி, மார்ச் 17 2026: வங்கிப் பரிவர்த்தனை முதல் சொத்து வாங்குதல், விற்பனை வரை அன்றாட வாழ்க்கையில் பான் கார்டு பயன்படுத்துவது குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சில தளர்வுகளும், சில இடங்களில் கடுமையான மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

வங்கி பரிவர்த்தனை

முன்னதாக, ஒரு நாளில் ₹50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ பான் கார்டு அவசியமாக இருந்தது. ஆனால், புதிய விதிப்படி ஒரு நிதியாண்டில் மொத்த பரிவர்த்தனை ₹10 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே பான் எண் வழங்க வேண்டும்.

வாகன வாங்குதலில் தளர்வு

இதுவரை வாகனங்கள் வாங்கும் போது கடுமையான விதிகள் இருந்த நிலையில், தற்போது ₹5 லட்சத்திற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைவான வாகனங்களுக்கு இது தேவையில்லை.

சொத்து பரிவர்த்தனை

சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை தொடர்பான வரம்பு ₹10 லட்சத்தில் இருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ₹20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துகளுக்கு மட்டுமே பான் எண் தேவைப்படும்.

காப்பீட்டில் கட்டுப்பாடு அதிகரிப்பு

இன்சூரன்ஸ் துறையில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்பு ஆண்டு பிரீமியம் ₹50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே பான் கார்டு கேட்கப்பட்டது. ஆனால், இனி எந்த அளவிலான காப்பீட்டிற்கும் பான் எண் கட்டாயம்.

உணவகங்களில் மாற்றம்

உணவகங்களில் ₹50 ஆயிரத்துக்கு மேல் பில் செலுத்தும் போது பான் கார்டு தேவைப்பட்ட நிலையில், தற்போது அந்த வரம்பு ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய பான் கார்டு பெறுவது எப்படி?

புதிய பான் கார்டு தேவைப்படுபவர்கள் வருமான வரித்துறையின் e-Filing தளத்தில் ஆதார் எண் மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ‘இன்ஸ்டன்ட் இ-பான்’-ஐ 10 நிமிடங்களில் இலவசமாக பெறலாம். பிளாஸ்டிக் கார்டு வேண்டுமெனில் NSDL அல்லது UTIITSL இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணம் சுமார் ₹107 ஆகும் மற்றும் ஓரிரு வாரங்களில் கார்டு வீட்டிற்கு வந்து சேரும்.

ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. மேலும், விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆதார் கார்டில் உள்ள விவரங்களுடன் பொருந்துமாறு இருப்பது அவசியம்.

இதையும் படிங்க: முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com