காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜிகாந்த்

Rajinikanth: தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலளித்து நடிகர் ரஜினி காந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Published on: March 17, 2026 at 1:02 pm

சென்னை, மார்ச் 17 2026: நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் அழுத்தத்தால் அரசியலில் இருந்து விலகியதாக தவெக ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா கருத்துவக்கு பதிலளித்து நடிகர் ரஜினி காந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று தனியாக குறிப்பிட்டுள்ளார். ரஜிகாந்தின் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : நெல்லை அருகே திகில்: எரிந்த காரில் 4 பேர் சடலமாக மீட்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com