Chennai: சென்னையின் நவலூரில் எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்து சிதறியதில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
Chennai: சென்னையின் நவலூரில் எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்து சிதறியதில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

Published on: March 15, 2026 at 4:15 pm
சென்னை மார்ச் 15, 2026;சென்னையின் நவலூரில் எல்.பி.ஜி. சிலிண்டர் வெடித்து சிதறியதில், இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் நவலூரில் சிலிண்டர்களில் ஒன்றில் வாயு கசிந்ததால், அடுப்பைப் பயன்படுத்த முயன்றபோது வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு கட்டிடத்தின் மூன்று பகுதிகளையும் சேதப்படுத்தியது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7.30 மணியளவில் எல்.பி.ஜி. சிலிண்டர் வெடிப்பில், மூன்று வயது கிரிதிகா மற்றும் ஒரு வயது தீரன் ஆகிய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ” சம்பந்தப்பட்ட நபர்கள் மூன்று சிலிண்டர்கள் வரை பதுக்கி வைத்து இருந்திருக்கலாம்; சிலிண்டர் பற்றாக்குறை அச்சம் காரணமாக அவர்கள் இந்த சிலிண்டரை சேமித்து வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதில் ஒன்றிலிருந்து கியாஸ் கசிந்து, இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன” என்றனர்.
இதையும் படிங்க தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி.. சற்று நேரத்தில் முழு அட்டவணை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com