அதிமுக தொகுதி பங்கீடு குழு.. யார் யாருக்கு இடம்? முழு விவரம்!

Assembly Election 2026: அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது; இதில் முக்கிய தலைவர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர்.

Published on: March 15, 2026 at 3:35 pm

சென்னை மார்ச் 15, 2026; அதிமுக தொகுதி பங்கீடு குழுவை அமைத்து தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்; தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு, இன்று வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ள இந்த குழுவில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி மற்றும் பா வளர்மதி உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதி உள்ளிட்ட முழு விவரங்கள் இன்று மாலை 4 மணிக்கு மேல் வெளியாகின்றன. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தொகுதி பங்கீடு குழுவை இன்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸும் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும் அங்கம் வகிக்கின்றன; வழக்கம்போல் நாம் தமிழர் தனித்து களம் காணும் என அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் இதுவரை அறிவிக்கவில்லை.

நடிகரும் கட்சியின் நிறுவனர் தலைவருமான விஜயின் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதனால் அக்கட்சி கூட்டணி அமைப்பதில், சிக்கலை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்.. வேல்முருகன் எம்.எல்.ஏ அதிரடி!

விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து HC Closes Parthiban’s Certificate Case

விளம்பரத்திற்கு வேண்டுமானால் பயன்படும்.. பார்த்திபன் வழக்கை முடித்து வைத்து நீதிபதி கருத்து

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com