Air india: ஈரான் அமெரிக்கா போர் நடைபெறும் நிலையில் விமான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; இந்த நிலையில் விமான டிக்கெட்டுகள் விலை உயர்கின்றன.
Air india: ஈரான் அமெரிக்கா போர் நடைபெறும் நிலையில் விமான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; இந்த நிலையில் விமான டிக்கெட்டுகள் விலை உயர்கின்றன.

Published on: March 11, 2026 at 12:25 pm
Updated on: March 11, 2026 at 12:32 pm
புதுடெல்லி மார்ச் 11, 2026; விமான டிக்கெட்டுகள் விலை உயர உள்ளது. ஏர் இந்தியா, ATF (விமான எரிபொருள்) விலை உயர்வை காரணமாகக் கொண்டு, எரிபொருள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க உள்ளது. மார்ச் 12 முதல் செய்யப்படும் அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும், உள்நாட்டு விமானங்களில் ₹400 எரிபொருள் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எவ்வளவு கட்டணம் அதிகரிப்பு?
விமான கட்டணங்கள் உயர உள்ளன. ஏர் இந்தியா குழுமம், உள்நாட்டு விமானங்களுக்கு ₹400 எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், சர்வதேச பயணிகள், ஏற்கனவே உள்ள கூடுதல் கட்டணத்திற்கு மேலாக $10 முதல் $50 வரை கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இது, விமான எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இதுகுறித்து, ஏர் இந்தியா குழுமம் தனது செய்திக் குறிப்பில், “2026 மார்ச் மாத தொடக்கத்திலிருந்து, விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலை பெரிதும் உயர்ந்துள்ளது. இது, ஒரு விமான நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளில் சுமார் 40% ஆகும். விநியோக தடைகள் காரணமாக ஏற்பட்ட இந்த விலை உயர்வு, இந்தியாவில் மேலும் கடுமையாகப் பாதிக்கிறது. காரணம், டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய மாநகரங்களில் ATF மீது அதிக வரி (Excise Duty) மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளது. இதனால் செலவுகள் அதிகரித்து, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு பொருளாதாரத்தில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி… அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அமல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com