NCERT Class 8 textbook Row: NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற நீதித்துறை குறித்த ஆட்சேபனைக்குறிய கருத்துகளுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
NCERT Class 8 textbook Row: NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற நீதித்துறை குறித்த ஆட்சேபனைக்குறிய கருத்துகளுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

Published on: March 10, 2026 at 1:18 pm
Updated on: March 10, 2026 at 2:46 pm
புதுடெல்லி, மார்ச் 10 2026: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(என்.சி.இ.ஆர்.டி) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பெரும் புயலை கிளப்பியது. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் விளக்கம் கேட்டதை தொடர்ந்து அந்த புத்தகம் திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிபந்தனையற்ற மன்னிப்பு கூறியது. மேலும் முழு புத்தகமும் திரும்ப பெறப்பட்டதை அறிவித்துள்ளது. புத்தகம் முழுமையாக பெறப்பட்டதாகவும் இனி கிடைக்காது என்றும் மேலும் அறிவித்துள்ளது.
‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் உள்ள ஒரு அத்தியாயத்தில் ஊழல் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தேக்கம் மற்றும் பொதுவான எண்ணிக்கையிலான நீதிபதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளை குறிப்பிட்டு நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் விசாரணைக்கு குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: யூ.பி.எஸ்.சி 2026: எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் காலியிடங்கள் உள்ளன?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. மேலும் பாட புத்தகத்தில் நீதித்துறையை பற்றிய ஆட்சேபனைக்குரிய குறிப்புகளை தாமாக முன்வந்து விசாரித்தது. விசாரணையில் பள்ளி பாட புத்தகத்தில் நீதித்துறை ஊழல் பற்றிய குறிப்புகளுக்கு நீதிபதி கடும் ஆட்சியபனை தெரிவித்தார். மேலும் நீதித்துறையை அவதூறு செய்யவும் அதன் நேர்மையை கெடுக்கவும் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
பாட புத்தகத்தில் எந்த ஒரு வெளியீடு மறுபதிப்பு மற்றும் டிஜிட்டல் சுழற்சிக்கும் முழுமையான தடை விதித்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய அத்தியாயம் குறித்து மத்திய அரசும் வருத்தம் தெரிவித்தது. இது குறித்து தெரிவித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பதிப்பை தயாரித்தவர்கள் மீது பொறுப்பு நிர்ணயித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கனடாவில் உயர் கல்வி.. 100 மில்லியன் டாலர் நிதியுதவி.. இந்தத் திட்டம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com