PM Narendra Modi Birthday | செப்.17ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அஜ்மீர் தர்காவில் அன்னதானம் செய்யப்பட உள்ளது.
February 6, 2025
PM Narendra Modi Birthday | செப்.17ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் அஜ்மீர் தர்காவில் அன்னதானம் செய்யப்பட உள்ளது.
Published on: September 12, 2024 at 3:33 pm
PM Narendra Modi Birthday | பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள நிலையில் தனது 74வது பிறந்த நாளை செப்.17ஆம் தேதி கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் அவரது 74வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அஜ்மீர் ஷெரீப் தர்காவில் (Ajmer Sharif Dargah) பிரதமர் மோடி தரப்பில் 4 ஆயிரம் கிலோ காய்கறி அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து பேசிய தர்கா அதிகாரிகள், “பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், “சேவா பக்வாடா” உடன் இணைந்து, அஜ்மீர் தர்கா ஷெரீப்பில் 4 கிலோ காய்கறி உணவுகள் வழங்கப்பட உள்ளன” என்றார். அறக்கட்டளை நிர்வாகி சையத் அஃப்ஷான் சிஷ்டி, “பிரதமர் மோடியின் பிறந்தநாளில் அவர் நீண்ட ஆயுளுக்காக நாமும் பிரார்த்தனை செய்வோம். இந்திய சிறுபான்மை அறக்கட்டளை மற்றும் அஜ்மீர் ஷெரீப்பின் சிஷ்டி அறக்கட்டளை மூலம் முழு லங்கருக்கு (அன்னதானம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com