Girish Chodankar: ‘காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் கூட்டணியை வழிநடத்தும்’ என கிரிஷ் சோடாங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
Girish Chodankar: ‘காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் கூட்டணியை வழிநடத்தும்’ என கிரிஷ் சோடாங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Published on: March 7, 2026 at 1:30 pm
புதுச்சேரி மார்ச் 7 2026; தமிழ்நாட்டில் திமுகவும் புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக, புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு அவர் ஊடகங்களிடம் பேசிய கிரிஷ் சோடாங்கர், தமிழ்நாட்டில், கூட்டணியை DMK தொடர்ந்து தலைமை தாங்கும்; காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் INDIA கூட்டணியை வழிநடத்தும்” என்றார்.
மேலும், தேர்தல் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் போலவே புதுச்சேரியிலும் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்சியும் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும். தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சூத்திரம் புதுச்சேரியிலும் தொடரும். கூட்டணி என்றால் சில சமரசங்கள் இயல்பாகவே இருக்கும். இதை DMK தலைமையிடம் தெரிவித்துள்ளோம். புதுச்சேரி தொடர்பான பேச்சுவார்த்தைகள் புதுச்சேரியிலேயே நடைபெறும்,” என சோடாங்கர் கூறினார்.
யார் முதல்வர் வேட்பாளர்?
புதுச்சேரியை பொருத்தமட்டில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மூலம் தீர்மானிக்கப்படுவார் என்றும் கிரிஷ் சோடாங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க :திருச்சியில் திமுக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com