Taranjit Singh Sandhu: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
Taranjit Singh Sandhu: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

Published on: March 6, 2026 at 1:07 pm
புதுடெல்லி, மார்ச் 06 2026: டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக தரஞ்சித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். வி.கே. சக்சேனா-விற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள தரஞ்சித் சிங் சந்து முன்னாள் இந்திய தூதர் ஆவார். பஞ்சாபை சேர்ந்த தரன்ஜித் 1988 பேட்ஜ் இந்திய வெளியுறவு பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியாவார்.
ஐநா சபை மற்றும் வாஷிங்டனின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகுத்துள்ள இவர் 2020 முதல் 2024 வரை அமெரிக்காவிற்கான இந்திய தூதரக பணியாற்றினார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் அமர்ந்த சரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல்.. காங்கிரஸின் 6 வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்!
வெளியுறவுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஒருவர் டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லி துணைநிலை ஆளுநரின் கீழ் தான் டெல்லி காவல்துறை மற்றும் பல முக்கிய நிர்வாக பொறுப்புகள் உள்ளன. டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்த வி.கே சக்சேனா தற்போது லடாக்கின் புதிய துணைநிலை ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்
மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்த நிலையில், அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநருக்கான கூடுதல் பொறுப்பு கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிதிஷ் குமார் ராஜ்யசபா வேட்புமனு தாக்கல்.. மார்ச் 16 அன்று வாக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com