மேற்கு ஆசியா மோதல்.. அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு.. பிரதமர் நரேந்திர மோடி

Narendra Modi: உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா எதுவாக இருந்தாலும், மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இரு நாடுகளும் ஆதரவு அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Published on: March 5, 2026 at 6:50 pm

புதுடெல்லி, மார்ச் 5, 2026: சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு, குடியேற்றம் என பல்வேறு துறைகளில், கூட்டாண்மை, புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை இந்தியா மற்றும் பின்லாந்து இன்று நியூடெல்லியில் பரிமாறிக் கொண்டன. பிரதமர் நரேந்திர மோடி, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் உடன் இருதரப்பு ஒத்துழைப்பை பல துறைகளில் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும், பன்முக அமைப்புகளில் ஒத்துழைப்பை பற்றியும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், கூட்டு அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி, உலகம் தற்போது நிலைகுலைவு மற்றும் நிச்சயமின்மை நிறைந்த காலகட்டத்தை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். உக்ரைனிலிருந்து மேற்கு ஆசியா வரை பல பிராந்தியங்களில் மோதல்கள் தொடர்கின்றன என்றும் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு முக்கிய தூதரக சக்திகள் தங்களது உறவுகளில் பொற்காலத்தை நோக்கி செல்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா–ஐரோப்பா உறவுகள் வளர்ந்து வருவது, உலகளாவிய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் பகிர்ந்த செழிப்பை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், இராணுவ மோதல் மட்டும் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதில் இந்தியா மற்றும் பின்லாந்து ஒருமித்த கருத்தில் உள்ளன என்றும், உக்ரைன் அல்லது மேற்கு ஆசியா எதுவாக இருந்தாலும், மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சிக்கும் இரு நாடுகளும் ஆதரவு அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல்.. பாஜக தலைவர் நிதின் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com