இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர்.. மு.க ஸ்டாலின்!

M K Stalin: இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Published on: March 4, 2026 at 1:35 pm

Updated on: March 4, 2026 at 1:36 pm

சென்னை, மார்ச் 4 2026: அய்யா வைகுண்டரின் அவதார தினத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

“கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்” எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.. அண்ணாமலை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com