L Murugan: நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
L Murugan: நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Published on: March 3, 2026 at 4:42 pm
சென்னை, மார்ச் 3 2026: நாங்குனேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணை அமைத்து இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற அறிவாலயம் அரசு என்று விமர்சித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போதையில் வந்த அந்த கும்பல், பயங்கர ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனனர். இந்தச் சம்பவம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இதையும் படிங்க: கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகத்தில் கொடூர கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போதை கும்பல்களை கட்டுப்படுத்த முடியாமல் போலி திராவிட மாடல் திமுக அரசு திணறுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையும், போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகம் முழுவதும் புரையோடிப் போயிருப்பதையும் இந்த கொடூர சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
காவல் துறை மீதும், இந்த அரசு மீதும் குற்றம் செய்பவர்களுக்கும் பயம் இல்லாததால் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொலை செய்யப்பட்ட வர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டிய முதலமைச்சர் முக ஸ்டாலின்
எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்களின் பாதுகாப்பையும் மதிக்காத திமுக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்குநேரி இரட்டை கொலை..எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com