இஸ்ரேல்-ஈரான் போர்: சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த 217 பேர்

Chennai: துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் சென்னை வந்தடைந்தனர்.

Published on: March 3, 2026 at 12:23 pm

சென்னை, மார்ச் 03 2026, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை இந்தியா அழைத்து வர சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் சார்பாக 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதே போல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமும் மஸ்கட் விமான சேவையை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மும்பை, திருச்சியிலிருந்து மஸ்கட்டுக்கு விமான சேவை தொடங்குகிறது.

இந்நிலையில் சிறப்பு விமானம் மூலம் துபாயிலிருந்து 217 பேர் இன்று அதிகாலை சென்னை வந்தனர். அவர்களை அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கட்டியணைத்து வரவேற்றனர். பக்ரைன், கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகத்திறகு ஏர் இந்தியா விமான சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூடுதலாக ரூ. 2000 முதியோர் உதவித்தொகை..விளிம்பு நிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி.. முதலமைச்சர் கொடுத்த இன்ப அதிர்ச்சி

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்
TTV Dinakaran

கஞ்சா மாடல் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்.. நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவத்திற்கு டிடிவி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com