M.k Stalin: வழக்கமாக வழங்கப்படும் ரூ.1200 முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளதோடு, விளிம்பு நிலையில் இருப்பவருக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
M.k Stalin: வழக்கமாக வழங்கப்படும் ரூ.1200 முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளதோடு, விளிம்பு நிலையில் இருப்பவருக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

Published on: March 3, 2026 at 11:59 am
சென்னை, மார்ச் 03 2026: முதியோர் உதவித்தொகையுடன் இன்று கூடுதலாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலையில் இருப்பவருக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதி கூறியிருப்பதாவது,
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீப்பெட்டி தொழிற்சாலை விபத்து.. 4 நாள்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்த இளைஞர் உயிரிழப்பு!
மேலும், நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்!
நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்! என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தி.மு.க 25 தொகுதிகளை தாண்டாது.. த.வெ.க அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com