Israeli airstrike on Iran: ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின்(ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அமெரிக்க ராணுவம் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
Israeli airstrike on Iran: ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின்(ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அமெரிக்க ராணுவம் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

Published on: March 2, 2026 at 2:33 pm
வாஷிங்டன், மார்ச் 2 2026: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் மீதான தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி உட்பட முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளான பக்ரைன், ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் கடந்த 47 ஆண்டு காலங்கள் காலத்தில் ஐஆர்ஜிசி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் மிகப்பெரிய தாக்குதலில் ‘பாம்பின் தலை வெட்டப்பட்டது’ இனி ஐஆர்ஜிசிக்கு தலைமையகம் இருக்காது. பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ படையை அமெரிக்க ராணுவம் கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் மேலும் தொடரும் என அமெரிக்க ராணுவம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை சூறையாடிய கும்பல்: 8 பேர் உயிரிழப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com