Kerala: கேரளத்தில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், சாலை விபத்து மரணங்கள் குறைந்தன.
Kerala: கேரளத்தில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், சாலை விபத்து மரணங்கள் குறைந்தன.

Published on: March 2, 2026 at 1:34 pm
திருவனந்தபுரம், மார்ச் 2, 2026: கேரளாவில் 2025-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் அதிகரித்தபோதும், விபத்து மரணங்கள் குறைந்ததாக மோட்டார் வாகனத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025-இல் மாநிலம் முழுவதும் 49,889 சாலை விபத்துகளில் 3,733 பேர் உயிரிழந்தனர்; 56,922 பேர் காயமடைந்தனர்.
2024-இல் 3,875 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு 142 பேரின் உயிரிழப்பு குறைந்ததாக சம்மந்தப்பட்ட துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 2022 முதல் விபத்து மரணங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. 2022-இல் 4,317 பேர் உயிரிழந்தனர்; 2023-இல் 4,080; 2024-இல் 3,875; 2025-இல் 3,733 ஆக இது உள்ளது.
இதையும் படிங்க: ஆந்திரா பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 21 பேர் உடல் கருகி பலி
இதில், மற்றொரு முக்கிய அம்சம் மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்களில் ஏற்பட்ட குறைவு. 2024-இல் 1,450 மரணங்கள் பதிவாகிய நிலையில், 2025-இல் அது 1,345 ஆகக் குறைந்தது” என்றனர்.
இரு சக்கர வாகன விபத்து மரணங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன: 2022-இல் 1,669; 2023-இல் 1,567; 2024-இல் 1,450; 2025-இல் 1,345 ஆக உள்ளது. எனினும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளா போலீஸ் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, 2022-இல் 43,910 விபத்துகள் பதிவாகிய நிலையில், 2023-இல் 48,068; 2024-இல் 48,834; 2025-இல் 49,889 விபத்துகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாக்பூரில் பயங்கர வெடி விபத்து: 17 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com