தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்!

Actor Aari: ‘தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை” என நடிகர் ஆரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Published on: March 2, 2026 at 1:04 pm

சென்னை, மார்ச் 2, 2026: தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என நடிகர் ஆரி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இது கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய நடிகர் ஆரி, “தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், “இதைப் பற்றி கேட்டால், விளம்பரம் போதவில்லை என்கின்றனர். அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது” என்றும் அவர் புகார் தெரிவித்தார். இதற்கிடையில், “பல்வேறு தமிழ் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஒரு திரைப்படம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூக வலைதள ட்ரோல்கள்.. ரசிகர் கேள்வியும், சமந்தா பதிலும்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com