Dr. Ramadoss: திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்படக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr. Ramadoss: திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான மூட்டைகள் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்படக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: February 28, 2026 at 3:49 pm
சென்னை,பிப் 28, 2026: காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட சம்பா -& தாளடி பருவ நெல் மூட்டைகள் லட்சக்கணக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உழவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கூட திமுக அரசு செய்யத் தவறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் 13 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன் அறுவடை தொடங்கிய நிலையில், 60% பரப்பளவில் அறுவடை பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள நெல்லும் அடுத்த இரு வாரங்களில் அறுவடை செய்யப்பட்டு விடும். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 1300க்கும் கூடுதலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த நான்கு நாள்களாக எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : திமுகவுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.. செல்வ பெருந்தகை!
உழவர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதன் மூலமோ அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்வதன் வாயிலாகவோ உழவர்களுக்கு அடங்கல் ஆவணத்தை வழங்கச் செய்து அவர்களின் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், உழவர்கள் நலனில் அக்கறை இல்லாததால் தான் அதை செய்ய திமுக அரசு தவறி விட்டது என்று தெரிவித்துள்ளார்.
குறுவை பருவத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே இன்னும் உழவர்கள் மீளவில்லை. இன்னொரு பேரழிவையும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் தாங்க உழவர்கள் தயாராக இல்லை. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்து காவிரி பாசன மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.
இதையும் படிங்க : 7வது முறையாக தி.மு.க ஆட்சி.. இதுவே நீங்கள் எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு.. மு.க ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com