பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி?

FD Rates: பஞ்சாப் நேஷனல் வங்கி FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது.

Published on: February 26, 2026 at 9:15 pm

சென்னை, பிப். 26 2026: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்புத் தொகைகளுக்கான நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்த புதிய விகிதங்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 444 நாள் நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. FD பொது குடிமக்களுக்கு 6.60%, மூத்த குடிமக்களுக்கு 7.10% மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.40% வரை வழங்குகிறது.

444 நாள் நிலையான வைப்புத் திட்டத்திற்கு மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி இப்போது 444 நாள் சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தில் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.60%, சீனியர் சிட்டிசன் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு முறையே 7.10% மற்றும் 7.40% ஆகும்.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி

பரோடா வங்கி அதன் BOB ஸ்கொயர் டிரைவ் வைப்புத் திட்டத்தை 444 நாட்களுக்கு வழங்குகிறது, இதில் பொது குடிமக்களுக்கு 6.45%, மூத்த குடிமக்களுக்கு 6.95% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.05% வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த விகிதங்கள் ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கியின் இண்ட் செக்யூர் (444 நாட்கள்) நிலையான வைப்புத் திட்டம் பொது குடிமக்களுக்கு 6.45%, மூத்த குடிமக்களுக்கு 6.95% மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.20% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த விகிதங்கள் பிப்ரவரி 4, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.

எஸ்பிஐ

எஸ்பிஐயின் சிறப்பு தவணைக்கால திட்டமான “அம்ரித் விருஷ்டி” (444 நாட்கள்) க்கான வட்டி விகிதம் பொது குடிமக்களுக்கு 6.45%, மூத்த குடிமக்களுக்கு 6.95% மற்றும் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.05% ஆகும். இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வந்தன.

இதையும் படிங்க: இந்திய பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com