MK Stalin: தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
MK Stalin: தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Published on: February 26, 2026 at 6:57 pm
Updated on: February 26, 2026 at 7:03 pm
சென்னை, பிப்.26, 2026: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர். நல்லக்கண்ணு தனது 101வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மரணித்தார். அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் தோழர் நல்லக்கண்ணுவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல், மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லக்கண்ணு தனது 101ஆவது வயதில் நேற்று (புதன்கிழமை) மறைந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தோழர். நல்லக்கண்ணுவை பொருத்தமட்டில், அரசியல் என்பது ஒருபோதும் தனிப்பட்ட ஆசை அல்லது பதவி விருப்பம் அல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான அநீதிகளை எதிர்த்து, அவர்களை ஒருங்கிணைத்து, இயக்கி, போராடச் செய்வதற்கான கருவியாக பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 39 தொகுதிகள், 2 மாநிலங்களவை சீட்.. காங்கிரஸ் தி.மு.க பேச்சு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com