Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.
Gold rate today: சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.

Published on: February 25, 2026 at 11:42 am
சென்னை, பிப் 25, 2026: சர்வதேச பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று (பிப்ரவரி 25, 2026) தங்கத்தின் விலை உயர்வு அடைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கான விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.320 உயர்ந்து ரூ. 119,440 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராம் ரூ. 14,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூபாய் 16 ஆயிரத்து 287 க்கும் சவரன் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 296க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தமட்டில் நேற்றைய விலையைவிட இன்று கிலோகிராமுக்கு ரூ.5000 உயர்ந்துள்ளது. கிராம் ரூ. 295க்கும் கிலோ ரூ. 295,000க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க : ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் இரண்டு நாளில் 17% சரிவு; கிளை மோசடி காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com