T K S Elangovan: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருணைத் தொகை அறிவிப்பு, நீதிமன்ற அவமதிப்பு என தி.மு.க. கூறியுள்ளது.
T K S Elangovan: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருணைத் தொகை அறிவிப்பு, நீதிமன்ற அவமதிப்பு என தி.மு.க. கூறியுள்ளது.

Published on: February 25, 2026 at 8:57 am
சென்னை, பிப்.24, 2026: அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நீதிமன்ற அவமதிப்பு என தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருணைத்தொகை அறிவிப்பது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு உள்ளது கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார் பீகார் மாநிலத்தில் தேர்தல் நேரத்தில் கருணைத்தொகை அறிவித்தது தவறு என்று நீதிமன்றம் சொல்லி உள்ளது; எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்” என்றார்.
அ.தி.மு.க.வின் 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளில், * ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்போடு சேர்த்து 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை 8000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை.. மு.க ஸ்டாலின் வாக்குறுதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com