Nassco: ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு26-ல் $315 பில்லியன் வருவாய் என நாஸ்காம் கணித்துள்ளது.
Nassco: ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில், நிதியாண்டு26-ல் $315 பில்லியன் வருவாய் என நாஸ்காம் கணித்துள்ளது.

Published on: February 24, 2026 at 8:17 pm
புதுடெல்லி, பிப்.24, 2026: உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (ஏ.ஐ) அச்சுறுத்தலால் வேலை இழப்பு அச்சம் நிலவுகிறது. இதற்கிடையில், இந்திய தகவல் தொழில்நுட்ப துறை நிதியாண்டு 26-ல் 6.1% வளர்ச்சி பெற்று $315 பில்லியன் வருவாய் ஈட்டும் என நாஸ்காம் தெரிவித்துள்ளது.
மேலும், நிதியாண்டு 2027-ல் இதே நிலை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாஸ்காம் தலைவர் ராஜேஷ் நம்பியார், தகவல் தொழில்நுட்ப துறை இன்னும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவே உள்ளது. நிதியாண்டு FY26-ல் 1,35,000 புதிய வேலைகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நிதியாண்டு FY25-ல் பணியாளர்கள் எண்ணிக்கை 5.67 மில்லியனிலிருந்து 5.8 மில்லியனாக உயர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஏ.ஐ கருவிகளால் ஏற்படும் சவால்கள் மற்றும் குறைந்த தேவை காரணமாக துறை சிரமங்களை எதிர்கொள்கிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையில், டி.சி.எஸ் இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக் போன்ற முன்னணி நிறுவனங்கள் FY27-க்கு வலுவான ஒப்பந்தங்கள் மூலம் நல்ல தேவை இருக்கும் என எதிர்பார்க்கின்றன.
இதையும் படிங்க: ரூ.80 ஆயிரம் விலையில் சாம்சங் கேலக்ஸி? மார்க்கெட்டுக்கு வரும் 3 மாடல்கள்.. முழு அலசல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com