தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. 74 லட்சம் பெயர்கள் நீக்கம்!

Final Voter List in Tamil Nadu: தமிழகத்தில் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி அதிகபட்ச வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்கு, 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Published on: February 23, 2026 at 9:26 pm

சென்னை, பிப்.23, 2026: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான இறுதி சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 74 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது வாக்காளர் பட்டியலை சுத்திகரிக்கும் பணியின் ஒரு பகுதியாகும். மேலும், தேர்தல் ஆணையம், துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், இந்த இறுதி பட்டியல், வரவிருக்கும் தேர்தலுக்கான முக்கியமான அடிப்படை ஆவணமாகவும் உள்ளது.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் அக்டோபர் 27, 2025 அன்று வாக்காளர் எண்ணிக்கை 6.41 கோடி இருந்தது. இது, பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் அது 5.67 கோடியாகக் குறைந்து காணப்பட்டது. இதனால் 74 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் விவரம்

  • ஆண்கள்: 2.7 கோடி
  • பெண்கள்: 2.8 கோடி
  • மூன்றாம் பாலினம்: 7,617

அதிகப்பட்ச வாக்காளர் தொகுதி

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி அதிகபட்ச வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்கு, 5.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
அதேநேரம், சென்னை ஹார்பர் தொகுதி குறைந்தபட்ச வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இங்கு, 1.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: மகளிர் உதவித் தொகை முன்கூட்டியே வரவு.. அ.தி.மு.க. அழுத்தம் காரணமா? மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com