Pinarayi Vijayan | ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்தது யார் என காங்கிரஸூக்கு பினராய் விஜயன் கேள்வியெழுப்பி உள்ளார்.
Pinarayi Vijayan | ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்தது யார் என காங்கிரஸூக்கு பினராய் விஜயன் கேள்வியெழுப்பி உள்ளார்.
Published on: September 10, 2024 at 11:59 pm
Pinarayi Vijayan | கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் முதல் அமைச்சர் பினராய் விஜயன் கலந்துகொண்டார்.
அப்போது, “காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பினராய் விஜயன் கடுமையான பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “கடந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருந்தது யார்? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும் பினராய் விஜயன், “சி.பி.ஐ(எம்)க்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதுதான் தற்போதைய பிரச்சாரம். எதிர்க்கட்சித் தலைவர் கூட இந்தப் பிரச்னையை வலுவாக எழுப்பி வருகிறார். ஆனால் அவர்கள் ஆர்எஸ்எஸ் தொடர்பைப் பற்றி பேசும்போது யாரைக் குறிப்பிடுகிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும்.
கேரளாவின் அனுபவங்களை யாரும் மறக்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்-ஐ நாம் சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. CPI(M) காரர்களை அதிகம் கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான். பல உயிர்களை இழந்துள்ளோம்.
உயிர்கள் பறிக்கப்பட்ட போதும், வகுப்புவாதத்தை தனிமைப்படுத்தும் முயற்சியில் நாங்கள் தளர்ந்துவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் யாருக்கு தொடர்பு என்பது இங்குள்ள அனைவருக்கும் தெரியாதா?
ஆர்.எஸ்.எஸ் கிளைக்கு யார் காவலாக நின்றது என்பது அனைவருக்கும் தெரியும். அதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது கேரள காங்கிரஸ் (கேபிசிசி) தலைவர் அல்லவா? அப்படியென்றால், உண்மையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் யாருக்கு தொடர்பு இருக்கிறது.
1984ல் தேசிய அளவில், ஆர்.எஸ்.எஸ்ஸுடன் காங்கிரசுக்கு என்ன மாதிரியான தொடர்பு இருந்தது? அப்போதைய ஆர்.எஸ்.எஸ்., சர்சங்கசாலக் மதுகர் தத்தாத்ராயா தியோராஸ் பெயர் எப்படி பிரபலமடைந்தது?
இது வரலாற்றில் நன்கு அறியப்பட்டதாகும். 1986ல் ராஜீவ் காந்தியுடன் தேர்தல் புரிந்துணர்வை ஏற்படுத்தினார்கள். அதன்பின்னர், சங்பரிவாரத்தின் அழுத்தத்தால், ராம் லல்லாவை நிறுவி வழிபாட்டிற்காகத் திறக்க முடிவு செய்தார்கள். இப்போது சொல்லுங்கள், ஆர்எஸ்எஸ் மீது யாருக்கு சாஃப்ட் கார்னர் உள்ளது?” என்றார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com