வேலூர், பிப்.23, 2026: வேலூரில் த.வெ.க தலைவர் விஜய் பேசுகையில், “நம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும்” தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.க்குமான தேர்தல் என ஸ்டாலின் பேசுகிறார்.
இப்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கான தேர்தலா, முதல்வர் சார்? எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும்” என்றார்.
வெளிப்படையா அறிவிக்க முடியுமா
தொடர்ந்து, “அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்கிட்ட இருந்த சொத்து எவ்வளவு?; அரசியலுக்கு வந்த பிறகு உங்க கிட்ட இருக்கிற சொத்து எவ்வளவு? வெளிப்படையா அறிவிக்க முடியுமா? அந்த சொத்தெல்லாம் உங்களுக்கு எப்படி வந்துச்சுனு சொல்ல முடியுமா? எனவும் கேள்வியெழுப்பினார்.
கிராமத்திற்கு வருகிறேன்
மேலும், “உங்க எல்லாரையும் சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை; ஆனால் சூழ்ச்சி செய்து தடை போடுகிறார்கள் நம் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமமாக வந்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்ற விஜய், “”எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது; எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்; யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்; எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்; இது நிஜம்” என்றார்.
விஜய் vs ஸ்டாலின்
இதையடுத்து, “இது தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்தான் இந்த தேர்தல்; தமிழ்நாடுதான் விஜய்; விஜய் தான் தமிழ்நாடு; தீய சக்தி திமுக, தூய சக்தி தவெகவுக்கு இடையேயான போர்” என்றார்.
மேலும், “தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம்தான்.. அது காமராஜர் காலத்தில்.. அண்ணா காலத்தில்.. எம்.ஜி.ஆர் காலத்தில் இன்றைக்கு சூப்பர் ஸ்டேண்டப் காமெடிக்காரர் நடத்துற மாநிலமா மாறிடுச்சு” என முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தாக்கிப் பேசினார்.
இதன் மூலம், அவர் அரசியல்வாதிகளின் சொத்து நிலை மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக, தேர்தல் ஆவணங்களில் வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். அதில், அரசியலுக்கு வருவதற்கு முன் இருந்த சொத்துகளும், பின்னர் சேர்த்துக்கொண்ட சொத்துகளும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம்.. தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்