திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த தேமுதிக.. தமிழக அரசியலில் பரபரப்பு!

DMDK joins DMK: 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தேமுதிக இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Published on: February 19, 2026 at 9:33 pm

சென்னை பிப்ரவரி 19, 2026; தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கும் தேமுதிகவுக்கும் இடையே தேர்தல் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை தவிர்த்து வந்தார்; இந்த நிலையில் அவரின் மரணத்திற்கு பின்னர் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இது சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சிலர் கடுமையான வார்த்தை பிரயோகங்களால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் க்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். 2026 சட்டமன்ற பொது தேர்தலை பொருத்தமட்டில், தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாகவே நிலவி வந்தது.
இதற்கிடையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கோவை ஈஷா மைதானத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அதிமுக மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.

இதனால் தேமுதிக பெரும்பாலும் அதிமுக அல்லது பாரதிய ஜனதா கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிரடியாக பிரேமலதா விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என அதிரடியாக அறிவித்துள்ளார். தேமுதிகவை பொருத்தமட்டில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒருமுறை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது; அதன் பின்னர் விஜயகாந்தின் உடல் நல பிரச்சனை காரணமாக அந்தக் கட்சி தொடர்ந்து அரசியலில் சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தேமுதிக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தோல்வியடைய வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிச்சாமி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com