இயற்கை வேளாண் மையம்.. விவசாயிகளுக்கு நெல் வகைகள்.. விவசாய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

Tamil Nadu Budget: தமிழக விவசாய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

Published on: February 17, 2026 at 10:32 pm

சென்னை, பிப்.17, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாய பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இந்த விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, “58 ஆயிரம் தரிசு நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்தார். இந்நிலையில், இயற்கை வேளாண் மையம் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவசாய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

  • இயற்கை வேளாண் மையம்.. விவசாயிகளுக்கு நெல் வகைகள்.
  • 58 ஆயிரம் தரிசு நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
  • மன்ணுயிர் காப்போம் திட்டம் 142 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • கோவையில் நம்மாழவர் இயற்கை வேளாண் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 900 மெட்ரிக் டன் நெல் வகைகள் சேகரிக்கப்பட்டு 70 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் சார்பில் 12 லட்சத்து 84 ஆயிரம் விவசாயிகளுக்கு 178 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” எனவும், தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வரி சேமிப்பு, வருமானம் உயர்வு.. டாப் 5 ELSS மியூச்சுவல் ஃபண்ட்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com