Tamil Nadu Budget: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17, 2026) தாக்கல் செய்யப்பட்டது.
Tamil Nadu Budget: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17, 2026) தாக்கல் செய்யப்பட்டது.

Published on: February 17, 2026 at 10:24 pm
Updated on: February 17, 2026 at 10:34 pm
சென்னை, பிப்.17, 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்து சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் பூந்தமல்லி டூ போரூர் மிக முக்கியமானதாகும். இந்த நிலையில் பட்ஜெட்டில் மெட்ரோ அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.
பட்ஜெட்டில் மெட்ரோ அறிவிப்புகள்
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார். மேலும், “ ரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் பகுதியை இயக்குவதற்கான ஒழுங்குமுறை அனுமதி இரயில்வே வாரியத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.
பூந்தமல்லி டூ போரூர்
பூந்தமல்லி டூ போரூர் மெட்ரோ குறித்து தெரிவிக்கையில், “ பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ இரயில் வழித்தடம், வடபழனியில் தற்போதுள்ள மெட்ரோ வழித்தடத்துடன் இணைக்கப்பட உள்ளது” என்றார். மேலும், “11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட 14.6 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜனவரி 2026.. நாட்டின் சில்லறை பணவீக்கம் 2.75%
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com