ஷாருக் போன்ற ஹீரோவை பார்த்ததில்லை.. அனுபவ் சின்ஹா

Shah Rukh Khan: “ஷாருக் கான் தனியாகவே பாலிவுட்டில் நாகரிகத்தை கொண்டு வந்தார்” என்று அனுபவ் சின்ஹா கூறியுள்ளார்.

Published on: February 17, 2026 at 1:12 pm

மும்பை, பிப்.17, 2026: ஷாருக் கான் தனியாகவே பாலிவுட்டில் நாகரிகத்தை கொண்டு வந்தார். அவருக்கு முன், நான் ஒரு ஹீரோவை இப்படிப் பார்த்ததில்லை..” என அனுபவ் சின்ஹா கூறியுள்ளார். சமூகத்தில் விவாதங்களை தூண்டும் படங்களை இயக்கியவர் அனுபவ் சின்ஹா ஆவார். இவரின், முல்க், தப்பாட், பீட் போன்ற படங்கள் சமூகத்திற்கு கண்ணாடியாக இருந்தன.

இவரின் வரவுள்ள படமான அஸ்ஸி – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் நீதிக்காக போராடும் கதையாகும். மேலும், இந்தப் படம் நீதியின் உண்மையான அர்த்தம் என்ன என்பதையும் ஆராய்கிறது எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில், “ஷாருக் கான் பல ஆண்டுகளாக தொடர்ந்து நன்நடத்தை கொண்டுள்ளார். இது மிகவும் ஊக்கமளிக்கும் நடத்தை. இப்போது, நீங்கள் பாலிவுட்டில் பெண்களுக்கு மரியாதையை அடிக்கடி காண்கிறீர்கள்.

இதுவே ஒரு மாற்றம். மக்கள் பெண்களுக்காக கதவுகளைத் திறக்கிறார்கள். இந்த நாகரிகத்திற்கு ஒரே காரணம் ஷாருக் கான் தான்” என்றார். மேலும், ஷாருக்கான் போன்று ஒரு நடிகரை நான் இதுவரை பார்த்ததில்லை” எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: என்னை பற்றிய அணுகுமுறை மாறும்.. இந்தப் படம் கைகொடுக்கும்.. சன்னி லியோன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com