என்னை யாரும் கொல்லப் போவதில்லை.. ஆனாலும் பாதுகாவலர்கள் ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்!

Priyanka Chopra on security: தான் ரசிகர்களை மதிக்கிறேன். அதேநேரம் தனக்கு பாதுகாப்பு தேவை என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published on: February 14, 2026 at 11:23 am

புதுடெல்லி, பிப்.14, 2026: நடிகை பிரியங்கா சோப்ரா, தனக்கு பாதுகாப்பு ஏன் தேவை என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். எனினும் இதுதொடர்பாக அவர் Varietyக்கு அளித்த பேட்டியில், ரசிகர்கள் தன்னை அணுகும்போது அது தன்னுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, “என்னை யாரும் அணுகி புகைப்படம் எடுக்கலாம், பேசலாம். எனக்கு அது பிடிக்கும் என்பதை என் பாதுகாப்பு குழுவும் அறிவார்கள். அவர்கள் இருப்பதன் காரணம், எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் வீடியோ எடுக்காமல் பார்த்துக்கொள்வதற்காக” என்றார்.

மேலும், “எல்லோரிடமும் செல்போன் இருப்பது தான் எனக்கு பெரிய கவலை. இது அடிக்கடி நடக்கிறது, குறிப்பாக என் மகளுடன் இருக்கும் போது. நாங்கள் பூங்காவில் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிடும் போது, திடீரென அந்த வீடியோ ஆன்லைனில் தோன்றுகிறது. அதற்காகவே எனக்கு பாதுகாப்பு தேவை. இல்லையெனில் எனக்கு வேறு தேவையில்லை. யாரும் என்னைக் கொல்லப் போவதில்லை,” என்றும் அவர் சிரித்தபடி கூறினார்.

இதையும் படிங்க: 20 நிமிட உடற்பயிற்சி.. 50 வயதில் 25 வயது இளமை.. நடிகை ஜெனிஃபர் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com