Kisan Credit Card : இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ‘கிசான் கிரெடிட் கார்டு’ (கே.சி.சி) திட்டத்திற்கான திருத்தப்பட்ட வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
Kisan Credit Card : இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ‘கிசான் கிரெடிட் கார்டு’ (கே.சி.சி) திட்டத்திற்கான திருத்தப்பட்ட வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

Published on: February 13, 2026 at 5:20 pm
புதுடெல்லி, பிப்.13, 2026: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) ‘கிசான் கிரெடிட் கார்டு’ (கே.சி.சி) திட்டத்திற்கான திருத்தப்பட்ட வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வரைவு, மண் பரிசோதனை, வானிலை முன்னறிவிப்பு, இயற்கைச் சான்றிதழ் போன்ற வேளாண் தொழில்நுட்ப முயற்சிகளுக்கான செலவுகளை விவசாயக் கடன் கூறுகளுக்குள் சேர்க்க முன்மொழிகிறது.
மேலும், இந்தப் புதிய வரைவின் படி, ஒவ்வொரு விவசாயிக்கும் 2 லட்சம் ரூபாய் வரையிலான வேளாண் மற்றும் தொடர்புடைய கடன்களுக்கு அடமானம் மற்றும் மார்ஜின் தேவைகள் விலக்கப்படுகின்றன.
பயிர் அடிப்படையிலான நிதி அளவுகோலுடன் கிசான் கிரெடிட் கார்டின் கடன் வரம்புகள் ஒத்திசைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒரு ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு 10,000 முதல் 50,000 ரூபாய் வரை நெகிழ்வான கடன் வரம்பு முன்மொழியப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி இந்திய ரிசர்வ் வங்கி, குறுகிய கால பயிர்களுக்கு 12 மாதங்கள் மற்றும் நீண்ட கால பயிர்களுக்கு 18 மாதங்கள் என பயிர் காலக்கெடுவை ஒரே மாதிரியாக்கியுள்ளது.
தொடர்ந்து, கிசான் கிரெடிட் கார்டின் செல்லுபடியாகும் காலம் ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு குறித்த கருத்துகளை 2026 மார்ச் 6க்குள் சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வருமானவரி சட்ட புதிய விதிகள், படிவங்கள்.. பரிந்துரைக்க சி.பி.டி.டி அழைப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com