Mary Kom actor Sunil Thapa dies: மேரி காம் படத்தில் நடித்த நடிகர் சுனில் தாபா காலமானார். அவருக்கு வயது 68.
Mary Kom actor Sunil Thapa dies: மேரி காம் படத்தில் நடித்த நடிகர் சுனில் தாபா காலமானார். அவருக்கு வயது 68.

Published on: February 7, 2026 at 7:39 pm
காத்மாண்டு, பிப்.7, 2026: நேபாள திரைப்படத் துறையில் முக்கிய பங்களிப்பு செய்த நடிகர் சுனில் தாபா தனது 68 வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனில் தாபா, பாலிவுட் படமான மேரி காம் திரைப்படத்தில், பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்துக்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.
இந்த நிலையில், நேபாளத்தின் காத்மாண்டு போஸ்ட்டின் கூற்றுப்படி, சுனில் வெள்ளிக்கிழமை காலை காத்மாண்டுவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சுனில் தாபாவுக்கு தபதாலியில் உள்ள நோர்விக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அறிக்கை
இதற்கிடையில், நடிகர் சுனில் தாபா மயக்கமடைந்து உள்ளே கொண்டு வரப்பட்டதாகவும், காலை 7:44 மணிக்கு எடுக்கப்பட்ட ஈ.சி.ஜி. அவரது மரணத்தை உறுதிப்படுத்தியதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சுனில் தாபாவின் மறைவு, நேபாள திரைப்பட உலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. மேலும், சுனில் தாபா நேபாள சினிமா மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிப்.20 ஜனநாயகன் ரிலீஸ்? தீயாய் பரவும் யூகம்.. சி.பி.எஃப்.சி அதிகாரி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com