விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார்.. மலையாள நடிகர் மணியன்பிள்ளை கைது

Actor Manian Pillai: திருவனந்தபுரம், விபத்து வழக்கில் பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Published on: February 7, 2026 at 2:06 pm

திருவனந்தபுரம், பிப்.7, 2026: திருவனந்தபுரம் கிளப் முன்பு, வெள்ளையம்பலம்–வழுதக்காடு சாலை விபத்தில், சூரஜ் (20), நிதேவ் (20) என்ற இரு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தார்கள். இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆவார்கள். இந்த விபத்தில், நடிகர் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிய கார், இளைஞர்கள் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ராஜு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தற்போது திருவனந்தபுரம் மியூசியம் போலீசாரின் விசாரணையில் உள்ளது. இந்த விபத்தானது, வியாழக்கிழமை (பிப்.5, 2026) இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது. சுப்பிரமணியம் மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணியன்பிள்ளை ராஜு, வெள்ளயம்பலம்-வழுதக்காடு சாலையில் நுழைந்தபோது, ​​அவரது கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதையும் படிங்க; ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல.. கூலி சிறந்த படமா? சௌந்தர்யா வெளிப்படை பேட்டி!

இருப்பினும், நடிகர் வாகனத்தை நிறுத்தவில்லை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்காமல் சம்பவ இடத்தை விட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்கள், விபத்தில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எந்தெந்த பிரிவுகளில் கீழ் வழக்கு?

பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், காரை ஓட்டிய ஓட்டுநர் மீது, அதிவேகமாக ஓட்டுதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அலட்சியமாக செயல்பட்டது மற்றும் விபத்தில் காயமடைந்த நபரை கவனிக்க மறுத்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; இந்தியாவின் முதல் VJ பரிதாப நிலை.. அன்று ரூ.1 லட்சம், இன்று ரூ.1,000 வருமானம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com