இந்திய பங்குச் சந்தை மந்தம்.. இன்போசிஸ் பங்கு 7.4% சரிவு!

Share Market: இன்றைய பங்கு வர்த்தகத்தில் இந்திய சந்தைகள் மந்தமாக காணப்பட்டன; இன்போசிஸ் பங்குகளை பொருத்தமட்டில் அதிகபட்சமாக 7 சதவீதம் வரை சரிவை கண்டன.

Published on: February 4, 2026 at 8:36 pm

மும்பை பிப்ரவரி 4, 2026; முதலீட்டாளர்கள் உலக சந்தைச் சிக்னல்கள் மற்றும் ரூபாய் இயக்கங்களை கவனித்து, எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். குறிப்பாக, பங்குச் சந்தைகள் உலகளாவிய நிலவரங்கள், ரூபாய் மதிப்பு மாற்றங்கள், மற்றும் அமெரிக்க வர்த்தக முன்னேற்றங்கள் மீது கவனம் செலுத்துகிறது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில், நிப்டி ஐ.டி (Nifty IT) குறியீடு கடந்த 3 மாதங்களில் மிகக் குறைந்த நிலையில் முடிந்தது. இன்போசிஸ் (Infosys) பங்கு 7% சரிந்தது. நிப்டி (Nifty) 25,800-க்கு கீழே முடிவடைந்தது; சந்தை மந்தமாக இருந்தது. அதாவது இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை புதன்கிழமை அமர்வை மந்தமான நிலையில், சிறிய நேர்மறை சாய்வுடன் முடித்தது. நிப்டி 50 49 புள்ளிகள் (0.19%) உயர்ந்து 25,776-இல் முடிந்தது.

பிஎஸ்இ சென்செக்ஸ் (BSE Sensex) 79 புள்ளிகள் (0.09%) உயர்ந்து 83,818-இல் நிறைவடைந்தது. தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தில், இன்போசிஸ் (Infosys) 7.4% சரிந்து ₹1,534-இல் முடிந்தது. மற்ற ஐ.டி பங்குகளும் அதேபோல் சரிந்தன. நிப்டி ஐ.டி (Nifty IT) குறியீடு 5.9% சரிவுடன் மூன்று மாதங்களில் மிகக் குறைந்த நிலையில் முடிந்தது; அனைத்து பங்குகளும் சிவப்பில் (red) முடிந்தன.

இதையும் படிங்க; மத்திய பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிப்பு.. சி.பி.எம் மாநிலம் தழுவிய போராட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com