Mamata Banerjee’s plea in SC: உச்ச நீதிமன்றத்தில், மேற்கு வங்காள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) வழக்கு விசாரணை, மம்தா பானர்ஜி தானே வாதிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
Mamata Banerjee’s plea in SC: உச்ச நீதிமன்றத்தில், மேற்கு வங்காள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) வழக்கு விசாரணை, மம்தா பானர்ஜி தானே வாதிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

Published on: February 4, 2026 at 2:02 pm
புதுடெல்லி, பிப்.4, 2026: உச்ச நீதிமன்றத்தில் இன்று மேற்கு வங்காள வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வழக்கு விசாரணையில் மம்தா பானர்ஜி தானே வாதிட விருப்பம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் நேரடியாக எஸ்.ஐ.ஆர் வழக்கில் வாதிட அனுமதி கோர உள்ளார்.
அதாவது தனது சட்ட அணியினர் மூலம், அவர் இடைக்கால மனுவை தாக்கல் செய்து, நேரடியாக வாதங்களை முன்வைக்க உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலை கேட்டுள்ளார்.
மனுவில் என்ன கோரிக்கை
மேற்கு வங்கத்தில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர் திருத்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த தனது மனுவில், மம்தா பானர்ஜி 2025 ஜூன் 24 மற்றும் அக்டோபர் 27 அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அனைத்து எஸ்.ஐ.ஆர் தொடர்பான உத்தரவுகளையும், அதனுடன் இணைந்த அனைத்து அறிவுறுத்தல்களையும் ரத்து செய்யக் கோரியுள்ளார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, பானர்ஜி, மோஸ்தாரி பானு மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் டெரெக் ஓ’பிரையன், டோலா சென் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் உள்ளடக்கிய பல மனுக்களை இன்று விசாரிக்கிறது.
மம்தா பானர்ஜி புதன்கிழமை (பிப்.4) பங்கேற்க உள்ள இந்த விசாரணைக்கு சில நாள்களுக்கு முன், மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் செயல்முறையை மேலும் வெளிப்படையானதாக, எளிதில் அணுகக்கூடியதாக, வாக்காளர்களுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களவையில் அமளி.. காகிதம் வீச்சு.. மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com