திடீர் மூச்சுத் திணறல்.. மூத்த கம்யூனிஸ்ட் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

R Nallakannu: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: February 2, 2026 at 9:42 pm

சென்னை பிப்ரவரி 2 2026; இரவு நேரத்தில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

101 வயதான மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்ல கண்ணுக்கு திடீரென வாமிட் ஏற்பட்டுள்ளது; மேலும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நல்ல கண்ணு உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்லகண்ணு தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட நல்ல கண்ணு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 101 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதையும் படிங்க; திமுக தனிப்பெரும்பான்மை பெறும்.. உறுதியாக கூறும் வைகோ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com