பெங்களூரில் தமிழர் மீது தாக்குதல்.. மருத்துவர் ராமதாஸ் கண்டனம்!

Tamil Nadu person was attacked in Bengaluru: பெங்களூருவில் தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தனது கண்டனத்தை மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Published on: January 31, 2026 at 11:21 pm

சென்னை, ஜன.31, 2026: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் மருத்துவர் ராமதாஸ் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 29-ம் தேதி தனது குடும்பத்துடன் பெங்களூரு நாகர்பாவி பகுதிக்கு மகிழுந்தில் சென்றார்.

அப்போது கர்நாடக ரக்ஷண வேதிகா அமைப்பைச் சேர்ந்த டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழி மறித்து மிரட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தி, கார் கண்ணாடியை உடைத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

காரில் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இருந்ததையும் பொருட்படுத்தாமல், அவரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது அநாகரிகத்தின் உச்சமாகும்.
எனவே தனிமனித உரிமையைப் பறிக்கும் வகையிலும், இரு மாநில மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் செயல்பட்ட டி.ஏ.தர்மராஜ கவுடா மற்றும் அவருடன் இருந்த 4 நபர்கள் மீது கர்நாடக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

‘மேலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் வருங்காலத்தில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் குறைய வழிவகுக்கும் என இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக, கர்நாடக அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” எனவும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!

உதயசூரியன் சின்னத்தில் வெற்றி.. ம.தி.மு.க எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்களா? வைகோ பதில்! Vaiko Thanks CM Vijay

உதயசூரியன் சின்னத்தில் வெற்றி.. ம.தி.மு.க எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்களா? வைகோ பதில்!

Vaiko Thanks CM Vijay : தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது தனக்கு மிகுந்த மன நிறைவை அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கப்: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா Women's Nations Hockey Cup

மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கப்: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

Women’s Nations Hockey Cup: இந்திய மகளிர் ஹாக்கி அணி, நியூசிலாந்து ஆக்லாந்தில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற…

கடினமான நாட்கள் இல்லை.. பாடம் கற்பிக்கும் நாட்கள்.. மனம் திறந்த ஸ்ருதிஹாசன் Shruti Haasan

கடினமான நாட்கள் இல்லை.. பாடம் கற்பிக்கும் நாட்கள்.. மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

Shruti Haasan : வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒரு பாடம் கிடைக்கிறது என்றும், கடினமான நாட்கள்கூட நமக்கு முக்கியமான அனுபவங்களை கற்றுத்தரும் நல்ல நாட்கள்தான் என்றும்…

50 போலீசாருடன் திடீர் ரெய்டு… செங்கல்பட்டு எஸ்பி அதிரடி SP's Surprise Raid in Chengalpattu

50 போலீசாருடன் திடீர் ரெய்டு… செங்கல்பட்டு எஸ்பி அதிரடி

SP’s Surprise Raid in Chengalpattu : செங்கல்பட்டில் மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்….

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்.. யார் இந்த ஐஸ்வர்யா ராமநாதன்? IAS Aishwarya Ramanathan

நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையர்.. யார் இந்த ஐஸ்வர்யா ராமநாதன்?

IAS Aishwarya Ramanathan : நாகர்கோவில் மாநகராட்சி புதிய ஆணையராக ஐஸ்வர்யா ராமநாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார்….

ரூ.13.18 லட்சம் கோடி கடன்.. வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. நிபுணர்கள் எச்சரிக்கை TN Debt Hits ₹13.18 Lakh Crore

ரூ.13.18 லட்சம் கோடி கடன்.. வெள்ளை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. நிபுணர்கள்

TN Debt Hits ₹13.18 Lakh Crore : தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், கடன் சுமையை எவ்வாறு சமாளிப்பது என்பது…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com