TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
TN Journalists Kidnapping Case: “கனிமக்கொள்ளையை படம் பிடித்த செய்தியாளர் கடத்தல் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும்” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: January 31, 2026 at 5:46 pm
சென்னை, ஜன.31, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும் கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24*7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை திருவரங்கம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டியின் ஆட்கள் கடத்திச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது.
அநீதியையும், கனிமவளக் கொள்ளையையும் அம்பலப்படுத்தியதற்காக செய்தியாளர்களை திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆள்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதுமட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 அடி கூடுதலாக தோண்டியதற்காக எனக்கு ரூ.23 கோடி அபராதம் விதித்துள்ளனர் என்று பழனியாண்டி ஒப்புதல் வாக்குமூலம் அளித்த கொடுமையும் நடந்தது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக கனிமக் கொள்ளையின் உச்சமாக செய்தியாளர்களையே கடத்திச் சென்று தாக்கும் அளவுக்கு பழனியாண்டியின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இதற்காக அவரையும், அவரது ஆட்களையும் கைது செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 65 லட்சம் கம்மவர்கள்.. பிப்.8 ஸ்ரீபெரும்புதூரில் மாநாடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com