புதுடெல்லி, ஜன.30, 2026: தலையில் பலத்த காயம்; மூளைச்சாவு என கொடூர ரணங்களுக்கு மத்தியில் தனது இன்னுயிரை இழந்துள்ளார் 27 வயதான டெல்லி ஸ்வாடு கமாண்டர் காஜல் சௌதாரி. டெல்லி ஸ்வாடு கமாண்டரான சௌதாரிக்கு, 2023 நவம்பர் மாதம் அங்கூர் என்ற இளைஞருடன் திருமணம் ஆனது.
இத்திருமணத்தின் போது அவருக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. புல்லட் பைக், தங்க நகை மற்றும் ரொக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கூடுதல் வரதட்சணை கேட்டு அங்கூர் குடும்பத்தினர் காஜலை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், காஜலை அவரது கணவர் அங்கூர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த காஜல், 20226 ஜனவரி 27ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. தனது சகோதரி காஜலின் மரணத்துக்கு அவரது கணவர் அங்கூர் தான் காரணம் என அவரின் சகோதரர் நிகில் தெரிவித்துள்ளார். தனது சகோதரியை அடித்து துன்புறுத்திய போது, அவர் என்னுடன் ஆடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். போன் துண்டிக்கப்படும் முன்னரே தனது சகோதரி கொடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்; இந்த மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Anbil Mahesh Poyyamozhi: தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தியது….
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள்…
Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.