நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் பொருளாதார ஆய்வறிக்கை.. பிரதமர் நரேந்திர மோடி

Economic Survey 2025-26: “இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை சவாலான சூழ்நிலையிலும் நாட்டின் சீர்திருத்த முயற்சிகள் மற்றும் நிலையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Published on: January 29, 2026 at 11:19 pm

புதுடெல்லி, ஜன.29, 2026: “பிரதமர் நரேந்திர மோடி, 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை நாட்டின் சீர்திருத்த முயற்சிகளையும் சவாலான சூழ்நிலையிலும் நிலையான முன்னேற்றத்தையும் பிரதிபலிக்கிறது” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மேலும், “இந்த ஆய்வறிக்கை, நாட்டின் வளர்ச்சி பாதையில் ஒன்றிணைந்த முன்னேற்றம், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை வலியுறுத்துகிறது. விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

2025-26 பொருளாதார ஆய்வறிக்கை

2025-26 பொருளாதார ஆய்வறிக்கை, வரும் நிதியாண்டில் (ஏப்ரல் முதல்) இந்திய பொருளாதாரம் 6.8% முதல் 7.2% வரை வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தக ஆபத்துகள் மற்றும் சந்தை நிலைமாறுதல்கள் இருந்தாலும், இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் தன்னுடைய நிலையைத் தக்கவைத்துள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் (NSO) மதிப்பீட்டின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் மூலம், இந்தியா தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக திகழ்கிறது.
மேலும், இந்தக் ஆய்வறிக்கை, நாட்டின் சாத்தியமான வளர்ச்சி விகிதத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட 6.5% இலிருந்து உயர்த்தி 7% என நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.20 லட்சம் வரை வருமான வரி இல்லை? மூத்தக் குடிமக்களுக்கு தனி வருமான வரம்பு?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com