விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு.. எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
Baramati Plane Crash: மகாராஷ்டிராவில் நடந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, ஜன.28, 2026: விஎஸ்ஆர் வெஞ்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் லியர்ஜெட் விமானம் பரமதி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவருமான அஜித் பவார் மற்றும் விமானத்தில் இருந்த மற்ற நால்வரும் உயிரிழந்தனர்.
அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 விமானம் காலை 7 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால் அது 8:10 மணிக்கு புறப்பட்டது. 9:12 மணிக்கு விமான விபத்து நடந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) தகவல் பெற்றது. இந்த நிலையில் இது விபத்து அல்ல என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்தக் கூற்றுகளை அஜித் பவாரின் உறவினரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார் மறுத்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி-எஸ்சிபி) மூத்த தலைவர் சரத் பவார், தனது மருமகனும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்த விபத்துக்கு தொடர்பான சதி குறித்த வதந்திகளை அவர் மறுத்தார்.
தனது முதல் எதிர்வினையில், என்சிபி-எஸ்சிபி மூத்த தலைவர் சரத் பவார், “சிலர் இந்தச் சம்பவத்தை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இதில் அரசியல் எதுவும் இல்லை. இந்த விமான விபத்து முற்றிலும் ஒரு விபத்தே. இந்தச் சம்பவம் துயரமானது என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் சரத் பவார் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:நான் கரூர், நீங்க மதுரை.. என்னை பற்றி ஏன் பேசுறீங்க? தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு ஜோதிமணி கேள்வி
Iyarkai : ‘நான்சி, கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் விரும்பினது விரும்புனத தான்; இந்த மோதிரம் இதனால் வரைக்கும் அவன் ஞாபகம், என் உயிரைக்…
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு…
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும்…
TN Weather: ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை…
CWG Judo: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 57 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாமினி மவுர்யாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.