Karur Stampede Case: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய், இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
Karur Stampede Case: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய், இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Published on: January 19, 2026 at 8:27 pm
புதுடெல்லி, ஜன.19, 2026: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, நடிகர் விஜய் இரண்டாவது முறையாக சி.பி.ஐ அலுவலகத்தில் ஜராகியுள்ளார். முன்னதாக, ஜனவரி 12 அன்று, அவர் சி.பி.ஐ தலைமையகத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக இரண்டாவது முறையாக சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஜன.19, 2026) விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
அதன்படி, இன்று காலை புதுடெல்லி லோதி ரோடு பகுதியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு விஜய் ஆஜரானார். அவரை டெப்யூட்டி சூப்பரிண்டெண்ட் பதவியிலுள்ள அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஜனவரி 12 அன்று, விஜய் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் வருமாறு அழைக்கப்பட்டார்.
அப்போது, பொங்கல் காரணமாக அவர் வேறு தேதியை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணைக் குழுவிடம் இருந்து (SIT) சி.பி.ஐ அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர்.
2025 செப்டம்பர் 27 அன்று தமிழ்நாட்டின் கரூரில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி. ஆதாரங்களை சேகரித்து வருகிறது. இதற்கிடையை குற்றப் பத்திரிகையில் விஜய் பெயர் இடம் பெறலாம் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: உழவர்களின் முதல் எதிரியே திமுக தான்.. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com